/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் முகாமில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட அறிவுறுத்தல்

ADDED : நவ 13, 2024 07:44 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் முகாமில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட வேண்டுமென, மாவட்ட செயலாளரும், பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், 2025 ஜன., 1 தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்ய, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த, அக்., 29 அன்று வெளியிட்டது. இதில், அக்., 29 முதல், நவ., 28 வரை புதிய வாக்காளர்களை சேர்க்க மற்றும் பெயர்கள் நீக்க, திருத்தம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, நவ., 16, 17, 23, 24 ஆகிய, 4 நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
எனவே, தேர்தல் ஆணையத்தால், அறிவித்துள்ள அட்டவணைபடி, சிறப்பு முகாம்கள் நடக்கும் நாட்களில், அ.தி.மு.க., நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு துணையாக, அப்பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.