/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்களை லாரியில் கடத்திய டிரைவருக்கு காப்பு
/
புகையிலை பொருட்களை லாரியில் கடத்திய டிரைவருக்கு காப்பு
புகையிலை பொருட்களை லாரியில் கடத்திய டிரைவருக்கு காப்பு
புகையிலை பொருட்களை லாரியில் கடத்திய டிரைவருக்கு காப்பு
ADDED : மார் 18, 2024 03:15 AM
மகேந்திரமங்கலம்: மகேந்திரமங்கலத்தில் சரக்கு லாரியில், 80,000 ரூபாய் மதிப்புள்ள, 150 கிலோ புகையிலை கடத்தி -டிரைவர் கைதான நிலையில், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் வழியாக சேலத்திற்கு புகையிலை பொருட்கள், சரக்கு லாரியில் கடத்துவதாக, மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று காலை, நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி விசாரித்தபோது, லாரியில் இருந்த, 3 பேர் தப்பினர். சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்ததில், 16 மூட்டைகளில், 80,000 ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ புகையிலை பொருட்களை இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், பென்னாகரம் அடுத்த சிட்லகாரம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக், 38, என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய வெள்ளிசந்தை கிருஷ்ணன், 67, பாலக்கோடு மைதீன் நகர் ஜீயாவுல், 30, பாப்பாரப்பட்டி லாரி உரிமையாளர் சுரேஷ், 44, ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.

