/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டியில் டெங்கு ஒழிப்பு தீவிரம்
/
பாப்பிரெட்டிப்பட்டியில் டெங்கு ஒழிப்பு தீவிரம்
ADDED : மார் 09, 2024 01:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரில், ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் கவுரி சங்கர் தலைமையில், சுகாதார துறையினர் அண்ணா நகர், செங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடித்து டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிநீர் ஆதாரங்களை கொசு உட்புகாத வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். காய்ச்சல் வருபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டு புகையிலை விற்ற, 5 கடைகளுக்கு தலா, 200 ரூபாய் வீதம், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாலமன்,சுகாதார ஆய்வாளர்கள் முரளி நவநீதகிருஷ்ணன் வினோத், யாசர் பாஷா, கிருஷ்ணன், சீனிவாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

