/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தபால் தலை கண்காட்சி பங்கேற்க விருப்பமா?
/
தபால் தலை கண்காட்சி பங்கேற்க விருப்பமா?
ADDED : டிச 07, 2024 07:33 AM
திருப்பூர்: வருங்கால தலைமுறையினரிடம், தபால் தலை சேகரிப்பு பழக்-கத்தை ஊக்குவிக்க, தமிழ்நாடு தபால்துறை சார்பில், சென்-னையில், 2025 ஜன., 29 முதல் பிப்., 1ம் தேதி வரை, மாநில அள-விலான தபால் தலை கண்காட்சி நடத்தப்படுகிறது.
கண்காட்சியில் பல்வேறு தபால் தலை சேகரிப்பாளர்கள், பள்ளி மாணவ, மாணவியரின் தபால் தலை சேகரிப்புகள்,
காட்சிப்படுத்-தப்பட உள்ளன. தமிழகத்தின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். தபால் தலை சேகரிப்புகளை,
காட்சிப்படுத்த விரும்புவோர், வரும், 9ம் தேதிக்குள், https://tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம். மாநில தபால் தலை கண்காட்சிக்கான விண்ணப்பங்கள் திருப்பூர் தலைமை தபால் அலுவலகம்
உட்பட அனைத்து தபால் தலை நிலையங்க-ளிலும் கிடைக்கின்றன.