/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இரட்டை கொலையில் அடையாளம் தெரிந்தது தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை
/
இரட்டை கொலையில் அடையாளம் தெரிந்தது தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை
இரட்டை கொலையில் அடையாளம் தெரிந்தது தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை
இரட்டை கொலையில் அடையாளம் தெரிந்தது தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை
ADDED : செப் 28, 2024 03:48 AM
தர்மபுரி: இரட்டை கொலையில், கொலை செய்யப்பட்டவர்கள் அடையாளம் தெரிந்தது. கொலை தொடர்பாக தர்மபுரி மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த, 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், தடங்கம் அடுத்த, புதிய சிப்காட் சாலை பகுதியில் அடையாளம் தெரியாத, 55 வயதுடைய ஆண் மற்றும், 50 வயதுடைய பெண் ஆகிய இரு சடலங்கள் குத்தி கொலை செய்யபட்டு அழுகிய நிலையில், கடந்த., 24 அன்று போலீசார் மீட்டனர். இது குறித்து, தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன், டி.எஸ்.பி., சிவராமன், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதில், இறந்தவர்கள் இருவரும் தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த மணிகண்டன், 55, இவரது மனைவி பிரேமலதா, 50, என்பதும், அவர்கள் தேனியில் குடியிருந்ததும் தெரியவந்தது. கணவன், மனைவி இருவரும் ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தனியார் விளம்பர அப்ளிகேஷன் பணம் மணிகண்டனிடம் கோடி கணக்கில் இருப்பதை அறிந்த கும்பல், அதை அபகரிக்கும் முயற்சியின்போது, கொலை நடந்ததாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், கடந்த, 22 அன்று தேனியில் கொலை செய்து, காரில் சடலத்தை கொண்டு வந்து, 24 அன்று தர்மபுரி மாவட்டம் தடங்கம் சிப்காட் சாலையில் வீசியுள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து, தேனி மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.