/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் இருப்பது சீட்டுக்காகவா, ஓட்டுக்காகவா'
/
திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் இருப்பது சீட்டுக்காகவா, ஓட்டுக்காகவா'
திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் இருப்பது சீட்டுக்காகவா, ஓட்டுக்காகவா'
திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் இருப்பது சீட்டுக்காகவா, ஓட்டுக்காகவா'
ADDED : நவ 06, 2025 12:47 AM
அரூர், ''திருமாவளவன் எதற்கு, தி.மு.க., கூட்டணியில் இருக்கிறார், சீட்டுக்காகவா, ஓட்டுக்காகவா,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் நேற்றிரவு நடந்த, பா.ம.க.,வின் 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் அவர்
பேசியதாவது:
பா.ம.க., சமூக நீதி கட்சி. பா.ம.க.,விற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித்எழில்மலைக்கு உணர்வுபூர்வமாக கொடுத்தோம். பட்டியல் சமூகத்தவரை, 1999ல் தான் தி.மு.க., மத்திய அமைச்சராக்கியது, ஆனால், பா.ம.க., 1998ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது.
பா.ம.க.,வில் வடிவேல் ராவணன் பொதுச்செயலாளராக உள்ளார். தி.மு.க.,வில் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுப்பார்களா. ஆனால், தி.மு.க., பேசுவது சமூக நீதி. நடத்துவது பட்டியல் இனத்தை எதிர்த்து வெறி. நான், திருமாவளவனை கேட்கிறேன், எதற்கு அவர், தி.மு.க., கூட்டணியில் இருக்கிறார், சீட்டுக்காகவா, ஓட்டுக்காகவா, இந்த நாலரை ஆண்டில், பட்டியல் இன மக்களுக்கு, தி.மு.க., என்ன செய்தது. சண்டை மூட்டி விட்டதை தவிர எதுவும் கிடையாது. தி.மு.க., அளித்த, 505 தேர்தல் வாக்குறுதியில், 66 மட்டுமே நிறைவேற்றி உள்ளது. அதாவது, 13 சதவீதம் மட்டுமே. பெயிலான கட்சியான, தி.மு.க., மீது மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
* பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி, கடத்துாரில் நடந்த, உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில், அன்புமணி பேசியதாவது:
தர்மபுரி மாவட்ட மக்களின் முன்னேற்றம் என் நோக்கம். நீரேற்று திட்டங்கள் கிடப்பில் உள்ளது. இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். நீர் மேலாண்மை திட்டம் எனக்கு பிடித்த திட்டம். பா.ம.க., ஆட்சி வந்த உடன், ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும். மக்களை சுயமரியாதையோடு வாழ வைப்பது என் கனவு. அதுதான் வளர்ச்சி. அதற்காக, அனைவரும் என் பின்னால்
வாருங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.

