ADDED : செப் 21, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுகளுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின்படி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம், 16 பேர் தேர்வு செய்யபட்டனர்.
இதில், குறிப்பிட்ட நபர்களுக்கு, வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகங்களில், அலுவலக உதவியாளராக
பணியாற்றுவதற்கான, பணி நியமன ஆணையை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல
அலுவலர் (பொ) செம்மலை, நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராகிம் ஆகியோர் உடனிருந்தனர்.