தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளியை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை

பள்ளியை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை

பள்ளியை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை


ADDED : செப் 24, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட வெதரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சரவணன், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் முறையாக மூடப்பட்டுள்ளதா, குறிப்பிட்ட இடைவெளியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் மற்றும் கட்டடங்களின் மொட்டை மாடிகளில் தேவையற்ற டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், பூந்-தொட்டிகள் உள்ளிட்டவைகளை அகற்ற அலுவலர்களுக்கு அறிவு-றுத்தினார். மேலும், பள்ளி வளாகம், சமையலறை, குழந்தைகள் கை கழுவும் இடம், கழிப்பறை உள்ளிட்ட இடங்களை துாய்மை-யாக வைத்துக்கொள்ள அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் க-ளுக்கு கலெக்டர் சரவணன் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது டவுன் பஞ்., செயல் அலுவலர் ஜீவானந்தம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us