தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை


ADDED : பிப் 16, 2025 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்-டியை கொன்று, அவர் அணிந்திருந்த, 6 பவுன் நகையை மர்மந-பர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பெரியதோட்டம் புதுாரை சேர்ந்தவர் பிரபுராஜ், 64. இவர் மனைவி பத்மாவதி, 60. குழந்தைகள் இல்லாத இவர்கள், விவசாயம் செய்து வாழ்ந்து வந்-தனர். நேற்று முன்தினம் இரவு, பத்மாவதி வீட்டிலும், பிரபுராஜ் வீட்டின் அருகே மாட்டு கொட்டகையிலும் துாங்கினர். நேற்று காலை வீட்டிற்கு வந்த பிரபுராஜ், வீடு திறந்திருந்த நிலையில், பத்மாவதி வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்ததை பார்த்தார். மேலும், அவர் அணிந்திருந்த, 5 பவுன் தாலி செயின், ஒரு பவுன் மோதிரத்தை காணவில்லை.

தர்மபுரி எஸ்.பி., மகேஷ்குமார், பென்னாகரம் பொறுப்பு டி.எஸ்.பி., ராஜசுந்தர், இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பத்மாவதி துாங்கும் போது, பீரோ சாவியை தலையணை அடியில் வைத்து துாங்குவது வழக்கம். நேற்று முன்தினமும் அதேபோல் சாவியை வைத்து விட்டு, வீட்டு கதவிற்கு தாழ்பாள் போடாமல் துாங்கி-யுள்ளார்.

அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தலைய-ணையால், அவரது முகத்தை அழுத்தி கொன்று விட்டு, அவரின் கழுத்திலிருந்த, 5 பவுன் தாலி செயின், கையிலிருந்த ஒரு பவுன் மோதிரம் உள்ளிட்ட, 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்-றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பீரோவை திறந்த திரு-டர்கள், அதிலிருந்த லாக்கரை திறக்காமல் விட்டதால், அதிலி-ருந்த, 8 பவுன் நகை தப்பியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us