ADDED : ஜன 09, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.எஸ்.தொட்டம்பட்-டியை சேர்ந்தவர் சரவணன், 53, விவசாயி; இவர், கடந்த, 6ல் மாலை, 5:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு பள்ளியில் இருந்து மகனை அழைத்து வரச் சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த, 27,500 ரூபாய், அரை பவுன் மோதிரம், வெள்ளி டம்ளர் உள்ளிட்ட பொருட்-களை திருடு போனது தெரிந்தது. புகார் படி, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

