ADDED : ஆக 12, 2026 04:47 AM

பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார் அருகே ஜல்லிகள் பெயர்ந்த மண்சாலையில் நடக்க முடியாமல், 4 ஆண்டுகளாக மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தர்மபுரி
மாவட்டம் கடத்துார் ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சியில்
திருவள்ளுவர் நகர், பாத்திமாநகர், வடகரை உள்ளிட்ட, 22 கிராமங்கள்
உள்ளன. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில்
திருவள்ளுவர் நகர், செல்லகுட்டை பகுதியில், 100 க்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசிக்கின்றனர். இம்மக்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி
இன்றி இருந்தனர். இதனால் கடந்த, 2021 - 22 ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை உறுதி திட்டத்தில், 18.80 லட்சம் ரூபாய் மதிப்பில் திருவள்ளுவர்
நகர் முதல், செல்லகுட்டை வரை, 4 கி.மீ.,தொலைவு மண் சாலை
அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த சாலை தரமாக அமைக்க படாததால், ஒரே
ஆண்டில் ஜல்லிகள் பெயர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது.
இதனால் அப் பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ
மாணவியர் நடந்நு கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பைக்
உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து
விபத்துக்குள்ளாகின்றனர். ஆகவே இந்த ஜல்லிகள் பெயர்ந்த சாலையை மக்கள்
பயன்படுத்தும் வகையில் தார்சாலையாக மாற்ற வேண்டும்.
