sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிடப்பில் கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம்; தென்பெண்ணையில் வீணாக செல்லும் தண்ணீர்

/

கிடப்பில் கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம்; தென்பெண்ணையில் வீணாக செல்லும் தண்ணீர்

கிடப்பில் கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம்; தென்பெண்ணையில் வீணாக செல்லும் தண்ணீர்

கிடப்பில் கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம்; தென்பெண்ணையில் வீணாக செல்லும் தண்ணீர்


ADDED : ஆக 15, 2024 07:09 AM

Google News

ADDED : ஆக 15, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: கிடப்பில் போடப்பட்ட, கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தால், தென்பெண்ணை ஆற்றில், தண்ணீர் வீணாக செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட, 17.35 அடி உயர தடுப்பணையின் மூலம், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.மழைக்காலங்களில் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்று திட்டம் வாயிலாக மொரப்பூர், நவலை, கம்பைநல்லுார், செங்குட்டை, சின்னாகவுண்டம்பட்டி, கடத்துார், சிந்தல்பாடியிலுள்ள, 66 ஏரிகளை நிரப்ப, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

கிடப்பில் திட்டம்மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த, 2019 ஜூலையில், இது குறித்து ஆய்வு செய்ய, 10 லட்சம் ரூபாயை, அப்போதைய, அ.தி.மு.க., அரசு ஒதுக்கியது. ஆய்வு நடத்தி அரசிடம் திட்ட வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்திற்கு கடந்த, 2020 பட்ஜெட்டில், 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்பின், 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது-. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதனால், தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதை வேடிக்கை மட்டும் பார்க்கும் நிலையில் மட்டுமே, தர்மபுரி மாவட்ட மக்கள் உள்ளனர்.

20 ஆண்டு போராட்டம்ராட்சத குழாய்கள் அமைத்து பம்ப்பிங் மூலம், ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதை செயல்படுத்துவதன் மூலம், 56 பஞ்.,களில் உள்ள, 8,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னையும் தீருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.இத்திட்டத்தை செயல்படுத்த கோரி, கடந்த, 20 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த, 2019ல் மொபைல்போன் டவர் மீது விவசாயி ஒருவர் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட பின், இக்கோரிக்கை மேலும் தீவிரமடைந்தது.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகடந்த, 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும்' என, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உறுதியளித்தார். ஆட்சி பொறுப்பேற்று, 3 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமுமின்றி, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஒடசல்பட்டியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி, 'தி.மு.க., வெற்றி பெற்றால் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும்' என வாக்குறுதி அளித்தார்.அரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், 'தேர்தல் முடிந்தவுடன் நானே தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன்' என்றார்.

தென்பெண்ணையாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரால், கடந்த சில நாட்களாக கே.ஈச்சம்பாடி தடுப்பணை நிரம்பி அதிலிருந்து, தண்ணீர் வீணாக தென்பெண்ணையாற்றில் செல்கிறது. கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், தற்போது, ஆற்றில் செல்லும் தண்ணீர் மூலம் வறண்டு கிடக்கும், 66 ஏரிகளை நிரப்பி இருக்கலாம். இத்திட்டம் குறித்து கலெக்டர், அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தாலும் எந்த பதிலும் வருவதில்லை. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணையாறு ஓடுகிறது. இருப்பினும் மொரப்பூர், கடத்துார், அரூர் பகுதிகள் வறட்சியாகத்தான் உள்ளது.- எஸ்.ஜெயபால்,தலைவர், மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம்.

கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டத்தின் திட்ட மதிப்பீடு ஆண்டுக்கு ஆண்டு, 10 சதவீதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்களை சந்தித்தபோது, அனைவரும் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என கூறினாலும், கிடப்பில்தான் உள்ளது. கிருஷ்ணகிரி அணையும் நிரம்பி விட்டது. தற்போது தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது. மொரப்பூர், கடத்துாரிலுள்ள ஏரிகள் நீரின்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன.- ஜி.சுரேஷ், சென்னம்பட்டி.






      Dinamalar
      Follow us