/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வைரவநாதர் திருக்குளத்தில் காலபைரவர் தெப்ப உற்சவம்
/
வைரவநாதர் திருக்குளத்தில் காலபைரவர் தெப்ப உற்சவம்
ADDED : நவ 25, 2024 01:42 AM
தர்மபுரி,: அதியமான்கோட்டை தக்ஷணகாசி காலபைரவர் கோவில், வைரவ-நாதர் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தக்ஷணகாசி காலபை-ரவர் கோவிலில் காலாஷ்டமி விழா கடந்த, 22 அன்று கொடி-யேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலபைரவ-ருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனையை தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு, 1008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு கொண்டு, சத்ரு சம்ஹார யாகம் நடந்தது. நேற்று அதி-காலை, சத்ரு சம்ஹார அலங்காரத்தில், காலபைரவர் அருள்பா-லித்தார். நேற்றிரவு, கோவில் அருகே உள்ள ஸ்ரீபைரவ புஷ்கரணி எனப்படும் வைரவநாதர் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்-தது. முன்னதாக, உற்சவர் ராஜா அலங்காரத்தில், ஊர்வலமாக புஷ்கரணி குளத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு ராஜா உபசார பூஜைகள் நடந்தன. அதே சமயம், மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.