/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாவட்ட மேசை பந்து போட்டியில் கம்பைநல்லுார் ஸ்ரீராம் பள்ளி சாதனை
/
மாவட்ட மேசை பந்து போட்டியில் கம்பைநல்லுார் ஸ்ரீராம் பள்ளி சாதனை
மாவட்ட மேசை பந்து போட்டியில் கம்பைநல்லுார் ஸ்ரீராம் பள்ளி சாதனை
மாவட்ட மேசை பந்து போட்டியில் கம்பைநல்லுார் ஸ்ரீராம் பள்ளி சாதனை
ADDED : டிச 03, 2024 01:41 AM
மாவட்ட மேசை பந்து போட்டியில்
கம்பைநல்லுார் ஸ்ரீராம் பள்ளி சாதனை
அரூர், டிச. 2-
தர்மபுரி மாவட்ட அளவில் நடந்த மேசைப்பந்து போட்டியில் கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் வேதீஸ், பவித்ரன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் நரேன்குமார், கிரீஷ்வர்மா ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர். மேலும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரதிக்ஷா, பிரீத்தி இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் தேவிஸ்ரீ, சஞ்சனா இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். ஒற்றையர் பிரிவில் தேவிஸ்ரீ 3ம் இடம் பிடித்தார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவியர் பிரிவில் ஓவியாஸ்ரீ, தீபனா ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் புவனேஸ்வரி, திருப்பதி, தினேஷ், அருண்பிரசாத், ராஜதுரை ஆகியோரை ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் பாராட்டினர்.