தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா

கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா

கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா


ADDED : நவ 25, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள, தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோவில் உச்சியில் நேற்று, மஹாதீபம் ஏற்றப்பட்டது. அதே போல், அரூர் மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், தீபம் ஏற்றப்பட்டது.

* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தில் மயிலை மலை மீது உள்ள பாலமுருகன் கோவில் அடிவாரத்தில் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. இதில் நேற்று காலை, 5:00 மணிக்கு பரணி தீபமும், தொடர்ந்து, 5 அடி உயர மஹா தீப கொப்பரையில், 150 கிலோ நெய், 300 மீட்டர் துணி திரி மூலம், மஹா தீபம் மாலை, 6:00 மணிக்கு மயிலை மலையிலுள்ள பாலமுருகன் கோவிலில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையை சுற்றி, மேளதாளத்துடன் கிரிவலம் சென்று அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகையை தரிசனம் செய்தனர். * பாலக்கோடு அருகே, பால்வண்ணநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதையடுத்து, நேற்று காலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜை நடந்தன.

தொடர்ந்து, கோவில் முன்பிருந்த தீபத்துாணில் மஹா தீபம் ஏற்றப்பட்டு, பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். அதேபோன்று, தர்மபுரி டவுனிலுள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம், கோவில் முன்புள்ள தீபத்துாணில் ஏற்றப்பட்டது. நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் அருகே அமைந்துள்ள சுகவனேஸ்வரர் கோவிலில், 3ம் ஆண்டு கார்த்திகை மஹாதீப திருவிழா நடந்தது. தர்மபுரி டவுன் நெசவாளர் காலனியிலுள்ள மஹாலிங்கேஸ்வரர், ஆத்துமேடு நஞ்சுண்டேஸ்வரர், இண்டூர் அருகே பூச்செட்டிஹள்ளியில் உள்ள மருந்தீசர் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது.

இதில், திரளான பக்தர்கள் தீப தரிசனம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த மூலவரை வழிபட்டு சென்றனர். கார்த்திகை தீப விழாவையொட்டி, கோவில்களில் வளாகம் முழுவதும் மின்னொளி மற்றும் தீப ஒளியில் பிரகாசித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us