/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி
/
கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி
ADDED : ஆக 06, 2024 08:47 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் விடுத்துள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் கருணா நிதியின், 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை, 7ம் தேதி புதன் கிழமை காலை, 10:00 மணியளவில், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் அமைதி பேரணி, காரிமங்கலம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகில், கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதில், தர்மபுரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வா கிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவை போற்றி, அஞ்சலி செலுத்த பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும். ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்த, தர்ம புரி மேற்கு மாவட்ட, தி.முக., சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.