/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு
ADDED : நவ 10, 2025 02:13 AM
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிராமங்கள் என, 32 கிராமங்களிலுள்ள, 6,250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் அதிகளவில், ஆகாயதாமரைகள் படர்ந்துள்ளன. அதனால், ஆற்று தண்ணீர் சுலபமாக செல்ல முடியாமல் உள்ளது. எனவே பொதுப்பணித் துறையினர் ஆகாயதாமரையை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.