/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிருபானந்த வாரியார், 119-வது பிறந்தநாள் விழா
/
கிருபானந்த வாரியார், 119-வது பிறந்தநாள் விழா
ADDED : ஆக 26, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருபானந்த வாரி :தர்மபுரி, தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில், கிருபானந்த வாரியார், 119-வது பிறந்தநாள் விழா, குமாரசாமிப்பேட்டை தட்சணாமூர்த்தி மடத் தெருவில் நேற்று நடந்தது.
அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். இதில், கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவர் சந்தோஷ் சிவா அன்னதானம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

