தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட சிலவரி செய்திகள்


UPDATED : ஜன 08, 2026 02:05 PM

ADDED : ஜன 08, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2026 02:05 PM ADDED : ஜன 08, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விவசாய நிலத்தில் ஒற்றை யானை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்தில் ஏராளமான இடப்பெயர்வு யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று காலை நேரத்தில் ஜவளகிரி வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, அத்திக்கோட்டை முனியப்பன் சுவாமி கோவில் அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்தது.

இதனால், விவசாய தோட்டங்களில் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர். நீண்ட நேரத்திற்கு பின், அருகிலுள்ள வனத்திற்குள் யானை சென்றது. விவசாய நிலங்களுக்கு அடிக்கடி யானைகள் வருவதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். அடர்ந்த வனத்திற்குள் யானைகளை விரட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓசூர் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு உட்பட்ட, தி.மு.க., நிர்வாகி களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா அந்தந்த பகுதிகளில் தனித்தனியாக நேற்று நடந்தது. பகுதி செயலாளர் ஆனந்தய்யா வரவேற்றார். ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தனர்.

மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளுக்கு காலண்டர், சேலை, வேஷ்டி, சட்டை, சுவர் கடிகாரம், ஸ்வீட்ஸ் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி பேசினார். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

அரூரில் தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டிகள்

அரூர்: தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், பொங்கலை முன்னிட்டு, அரூர் சிறு விளையாட்டு அரங்கில், கிரிக்கெட், கபடி, வாலிபால் ஆகிய போட்டிகளை, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான மணி நேற்று துவக்கி வைத்தார். இதில், அரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தென்னரசு, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அரூர் பஸ் ஸ்டாண்டில், லோக்சபா எம்.பி., உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், 2025-26ல், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது. தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பணிகளை துவக்கி வைத்தார். இதில், நகராட்சி தலைவர் இந்திராணி, கமிஷனர் ஹேமலதா மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரூ.45 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

அரூர்: அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தையில், 45 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 240 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

கலப்பின மாடு ஒன்று, 42,000 முதல், 65,000 ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 8,000 முதல், 32,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், 45 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

4.74 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், இன்று முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 4,74,840 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும், 781 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசாக தலா, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் 3,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், பொங்கல் பரிசு அந்தந்த ரேஷன் கடைகள் மூலம், தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் மின்னணு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல், சுழற்சி முறையில் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை ஜன., 9 ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us