/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிடப்பில் குமரன் தடுப்பணை திட்டம்: செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
/
கிடப்பில் குமரன் தடுப்பணை திட்டம்: செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
கிடப்பில் குமரன் தடுப்பணை திட்டம்: செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
கிடப்பில் குமரன் தடுப்பணை திட்டம்: செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 12, 2024 01:04 AM
கிடப்பில் குமரன் தடுப்பணை திட்டம்: செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
அரூர், அக். 12-
கிடப்பில் போடப்பட்டுள்ள குமரன் தடுப்பணை சீரமைக்கும் பணியை விரைந்து துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குமாரம்பட்டியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே, குமரன் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து, இடதுபுற கால்வாய் வழியாக, 4 கி.மீ., துாரத்திற்கு செல்லும் தண்ணீரால் பாப்பனாவலசை, மாம்பட்டி, இட்லப்பட்டி, குமாரம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்சனை தீர்வதுடன், பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
மேலும், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டமும் உயர்கிறது. இந்நிலையில், குமரன் தடுப்பணை மற்றும் அதன் பாசன கால்வாய்களை சீரமைத்திட கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 4.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 10 சதவீதம் பணி முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தற்போது பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டதாக புகார் தெரிவித்துள்ள விவசாயிகள், உடனடியாக குமரன் தடுப்பணை சீரமைக்கும் பணியை விரைந்து துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் கூறுகையில், ''சட்டசபையில் குமரன் தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்த போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனடியாக பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியபோதும், இதுவரை திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது,'' என்றார்.

