/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேக விழா
/
போலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 19, 2024 01:45 AM
போலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேக விழா
சென்னிமலை, நவ. 19-
சென்னிமலை அருகே புஞ்சை பாலதொழுவு ஊராட்சி பாலதொழுவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டியில், பழமையான ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, 2019 முதல், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் மூன்று முறை விழா ஏற்பாடு செய்யப்பட்டு நின்றது.
இந்நிலையில் பெருந்துறை தாசில்தார் செல்வகுமார் தலைமையில், இரு தரப்பினரும் பங்கேற்ற சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமுக முறையில் கும்பாபிஷேகம் நடத்த ஒப்புக்கொண்டனர். கும்பாபிஷேக நாளில் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் தாசில்தார் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு அளித்தனர். விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

