தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குறிஞ்சி மெட்ரிக் பள்ளி திறனறி தேர்வில் சிறப்பிடம்

குறிஞ்சி மெட்ரிக் பள்ளி திறனறி தேர்வில் சிறப்பிடம்

குறிஞ்சி மெட்ரிக் பள்ளி திறனறி தேர்வில் சிறப்பிடம்


ADDED : நவ 25, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், தமிழக அரசு நடத்திய மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, கடந்த மாதம், 11ம் தேதியன்று நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சின்னாங்குப்பம், குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இதில் மாணவி மித்ரா, 100க்கு, 97 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி கனிஷ்கா, 100க்கு, 96 மதிப்பெண்களும், மாணவியர் வர்ஷினி, நிவாஷினி தலா, 100க்கு, 96 மதிப்பெண்களும், மாணவி விஷாலினி, 100க்கு, 95 மதிப்பெண்களும், மாணவர் கவின், 100க்கு, 94 மதிப்பெண்களும், மாணவி கோபிகா, 100-க்கு, 90 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். அம்மாணவ, மாணவியரை, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர், ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us