ADDED : மார் 25, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : அரூரில், குருத்தோலை ஞாயிறு நாளையொட்டி, சந்தைமேட்டில் இருந்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி, ஓசன்னா பாடல் பாடியபடி பவனி வந்தனர்.கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவாக, மொரப்பூர் சாலையிலுள்ள துாய இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தனர்.
அங்கு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

