/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒப்பந்ததாரர் சார்பில் தொழிலாளர் நியமனம்: தொழிற்சங்கம் எதிர்ப்பு
/
ஒப்பந்ததாரர் சார்பில் தொழிலாளர் நியமனம்: தொழிற்சங்கம் எதிர்ப்பு
ஒப்பந்ததாரர் சார்பில் தொழிலாளர் நியமனம்: தொழிற்சங்கம் எதிர்ப்பு
ஒப்பந்ததாரர் சார்பில் தொழிலாளர் நியமனம்: தொழிற்சங்கம் எதிர்ப்பு
ADDED : நவ 13, 2024 07:44 AM
தர்மபுரி: அரசு டாஸ்மாக் குடோனில், தேவைக்கு ஏற்ப தொழிலாளர்கள் உள்ள நிலையில், டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர் சார்பில், புதிய தொழிலாளர்கள் நியமனத்துக்கு, அண்ணா மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி கூறுகையில், ''தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கு, மதுபாட்டில்களை வாகனங்களில் ஏற்றி, இறக்க கடந்த, 25 ஆண்டுகளாக, 31 சுமை துாக்கும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். டாஸ்மாக்கில் வருடம் ஒருவருக்கு, டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தம் மாற்றப்படும். ஆனால் கடந்த, 2 ஆண்டுகளாக ஒருவரே நீடித்து வருகிறார். ஒப்பந்ததாரர்கள் மாறினாலும், தொழிலாளர்கள் தொடர்ந்து, பணியில் நீடிப்பர்.
நேற்று, டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர் தரப்பில், 15 புதிய சுமை துாக்கும் தொழிலாளர்களை, டாஸ்மாக் குடோனில் சேர்த்தனர். இங்கு பணியிலுள்ள நபர்களுக்கு, வேலை மற்றும் கூலி பற்றாக்குறை உள்ளது. இதில், புதிய நபர்களை உள்ளே அனுமதித்தவுடன், அவர்களுடன் சேர்ந்து, பணி செய்யா விட்டால், குடோனை திறக்க முடியாதென பூட்டி வைத்துள்ளனர். ஒப்பந்ததாரர் தொழிலாளர்களை நியமிப்பது குறித்து, அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் துணை போகக்கூடாது,'' என்றார்.