சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2026 03:21 AM
தர்மபுரி: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி, ஏ.ஐ.சி.சி.டி.யு., சுமை துாக்கும் தொழிலா-ளர்கள் சங்கம் சார்பில், தர்மபுரி பொது வினியோக கிடங்கு முன், நேற்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் முரு-கேசன், பச்சையப்பன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி பொது வினியோக கிடங்கில், 23 நிரந்-தர சுமை துாக்கும் தொழிலாளர்களும், 15 ஒப்பந்த சுமை பணி தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வெளியில் இருந்து சுமை துாக்கும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த நிர்வாகம் முயற்சி செய்து வரும், முயற்சியை கைவிட வேண்டும். கடந்த, 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் சுமை துாக்கும் தொழிலாளர் களுக்கு வருங்-கால வைப்புநிதி பிடித்தம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மேலும், ஊதியத்தை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும். தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் ஒப்பந்த அடிப்படையில் பணி-புரியும் தொழிலாளர்களை வாக்காளர்களாக இணைக்க வேண்டும். கிடங்கில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு பி.எப்., பிடித்தம் செய்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்-பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
