/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதியின்றி அவதி
/
புட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதியின்றி அவதி
புட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதியின்றி அவதி
புட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதியின்றி அவதி
ADDED : ஜூலை 10, 2025 01:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளிக்கு புதுார், புட்டிரெட்டிப்பட்டி ரயிலடி, தாளநத்தம், செங்காட்டு புதுார் பகுதியில் இருந்து வரும், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 16 ஆசிரியர்கள் உள்ளிட்ட, 20 பேர் பணிபுரிகின்றனர். இங்கு மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. மாணவியருக்கு கழிவறை வசதி இருந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது.
இதனால் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். உடல் உபாதையை கழிக்க, 13 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் அருகேயுள்ள வயல்வெளி, அரசு மாணவர் விடுதிக்கு செல்கின்றனர். ஆசிரியர்களின் கழிவறை பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடமும், கல்வித்துறைக்கும் கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து பெற்றோர் கூறுகையில், '50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பழமையான இப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள் உள்ளன.
ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர், கழிவறை, சுகாதாரம், கேள்விக்குறியாக உள்ளது. ஆசிரியர்களுக்கும், மாணவியருக்கும் கழிவறை இருந்தும் பயனற்ற நிலையில் உள்ளது.
மாணவ, மாணவியரின் நலன் கருதி, அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.