தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி மாவட்ட 8 வன சரகத்தில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு

தர்மபுரி மாவட்ட 8 வன சரகத்தில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு

தர்மபுரி மாவட்ட 8 வன சரகத்தில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு


ADDED : பிப் 15, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத் தில், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று நடந்தது.

இது குறித்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்ததா-வது: தர்மபுரி வனக்கோட்டத்தில் உள்ள, 8 வனச்சரகங்களிலும் நிலவாழ் பறவைகள் அதிகம் நடமாடும், 25 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் நேற்று, நடப்பு ஆண்டிற்கான நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தி முடிக்கப்பட்-டுள்ளன. இதில், வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், உயிரிய-லாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என, 125 பேர் பங்கேற்-றனர். இவர்களின் கணக்கெடுப்பில், ஏசியன் கிரீன் பி ஈட்டர், இன்டியன் ராபின், இன்டியன் பாரடைஸ் பிளைஈட்டர், இன்-டியன் நைட் ஜார் உட்பட பலவகை பறவைகள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பறவைகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசு பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலம் முழுவதும் நடந்த இந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்த விபரங்கள் மொத்தமாக தொகுக்கப்பட்டு, அரசால் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.சுற்றுச்சூழல் சமநிலை யை பேணுதல், பசுமை பரப்பை அதிக-ரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பறவைகள் எவ்வளவு முக்கியத்-துவம் வாய்ந்தவை என்பது குறித்து, நேற்றைய கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்

களுக்கு வனத்துறை பணியாளர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்-டது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us