/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
/
நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2025 01:40 AM
தர்மபுரி,
தமிழ்நாடு நல அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில், 18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், நேற்று நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் சின்னராசு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கல்பனா, மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் முருகன், உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும். நில அளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை, மீண்டும் தரம் உயர்த்தி வழங்க வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவை பணிகளை கருத்தில் கொண்டு, உடனடியாக நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புற ஆதார, ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட்டு, புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். உட்பட, 18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டம், தர்மபுரி மாவட்டத்தில் நடந்தது வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

