/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சித்தேரி மலைப்பாதையில் தொடரும் நிலச்சரிவால் பாதிப்பு
/
சித்தேரி மலைப்பாதையில் தொடரும் நிலச்சரிவால் பாதிப்பு
சித்தேரி மலைப்பாதையில் தொடரும் நிலச்சரிவால் பாதிப்பு
சித்தேரி மலைப்பாதையில் தொடரும் நிலச்சரிவால் பாதிப்பு
ADDED : டிச 23, 2024 09:44 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரிமலை கடல் மட்டத்திலிருந்து, 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது, சித்தேரி மலைப் பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அவை சீரமைக்கப்பட்ட நிலையில், கடந்த, 13ல் பெய்த மழையால் மீண்டும், கொண்டை ஊசி வளைவில், 21வது கி.மீ.,ல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், 5 நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நிலச்சரிவு சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சித்தேரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மீண்டும், அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.