/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்
/
கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்
ADDED : ஆக 07, 2024 06:37 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் குப்பாகவுண்டர் தெரு, மாரியம்மன் கோவில் திருவிழாவில், இன்று காலை, 9:00 மணிக்கு மாரியம்மன் மற்றும் பூவாடைகாவேரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, நாளை காலை, 10:00 மணிக்கு தர்மபுரி ராமக்காள் ஏரி அருகிலுள்ள, செல்லியம்மன் மற்றும் விருந்தாடியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்க உள்ளது.அம்மன் ஊர்வலத்தில், முத்து பல்லக்கு ஜோடனை மற்றும் மாரியம்மன் மற்றும் பூவாடைகாவேரியம்மன் உற்சவ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில் குப்பாகவுண்டர் தெரு, எஸ்.வி., சாலை, பெரியார் சிலை, 4 ரோடு, ராமாக்கள் ஏரி, மதிகோன்பாளையம், கோட்டை முனியப்பன் கோவில் வழியாக மீண்டும் மாவிளக்கு ஊர்வலம் கோவிலை வந்தடையும். இதில், 700 கலைஞர்களுடன், 10,000க்கும் மேற்பட்டோர் பங்குபெறும் மாபெரும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.