/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தர்மபுரியில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 23, 2024 03:04 AM
தர்மபுரி: ஓசூரில், நீதிமன்ற வளாகம் முன் வக்கீலை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து, தர்மபுரி மாவட்ட வக்-கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்-துக்கு, தர்மபுரி வக்கீல்கள் சங்க தலைவர் சிவன் தலைமை வகித்தார். இதில், வக்கீலை வெட்டி கொலை செய்ய முயன்ற நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்க-ளுக்கு போலீஸ் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
மேலும், வக்கீல்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும் என
வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரிமங்கலம் வக்கீல்கள் சங்க தலைவர் பெரியசாமி, பென்னா-கரம் சங்க தலைவர் முத்துசாமி உள்பட, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.