தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/யானை நடமாட்டம் குறித்து துண்டு பிரசுர விழிப்புணர்வு

யானை நடமாட்டம் குறித்து துண்டு பிரசுர விழிப்புணர்வு

யானை நடமாட்டம் குறித்து துண்டு பிரசுர விழிப்புணர்வு


ADDED : மார் 10, 2026 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி மலை அடிவாரத்தை ஒட்டிய கிராமங்களில் யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பிக்கிலிமலை காப்புகாடு பகுதியில் யானைகள் வந்துள்ளதால் வத்திமரத்து அள்ளி, கிட்டம்பட்டி, திருமல்வாடி, பழைய பாப்பாரப்பட்டி, பனைகுளம், சஞ்சீவிபுரம் காந்திபுரம், சொரக்காபட்டிமலையூர், ஆத்துக்கொட்டாய் மற்றும் பாப்பாரப்பட்டி நகரை ஒட்டிய சுற்றுப்புறத்திலுள்ள அனைத்து ஊர் மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் வயல்வெளியில் தண்ணீர் பாய்ச்சுதல், திருட்டுத்தனமாக மின்வெளி அமைத்தல், இரவில் வெளியே கட்டில் போட்டு துாங்குதல் ஆகிய செயல்களில் ஈடுபட வேண்டாம். வீட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும், வீட்டிற்கு உள்ளேயே உறங்க வேண்டும். குறிப்பாக வயல்வெளி, தோப்பு பகுதிகளுக்குள் ஒதுங்க வேண்டாம் என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், இதுகுறித்து கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us