/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நாட்டை காக்கும் இளைஞர் சக்தியை கொடுக்கும் பெற்றோரை கொண்டாடுவோம்; அமைச்சர் மகேஷ்
/
நாட்டை காக்கும் இளைஞர் சக்தியை கொடுக்கும் பெற்றோரை கொண்டாடுவோம்; அமைச்சர் மகேஷ்
நாட்டை காக்கும் இளைஞர் சக்தியை கொடுக்கும் பெற்றோரை கொண்டாடுவோம்; அமைச்சர் மகேஷ்
நாட்டை காக்கும் இளைஞர் சக்தியை கொடுக்கும் பெற்றோரை கொண்டாடுவோம்; அமைச்சர் மகேஷ்
ADDED : பிப் 18, 2024 10:13 AM
தர்மபுரி: ''நாட்டை காக்கக்கூடிய, இளைஞர் சக்தியை கொடுக்கும் பெற்றோரை கொண்டாடுவோம்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசினார்.
தர்மபுரி, அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' என்ற மண்டல மாநாடு நேற்று நடந்தது. இதில், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்த, 30,000க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர்.
இதில், கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
அரசு பள்ளிகளில் பணியாற்றும், 500 அறிவியல் ஆசிரியர்களை, சென்னை, இந்திய தொழிற்நுட்ப நிறுவனத்திற்கு அழைத்து சென்று, பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, ஒரு லட்சம் மாணவர்களுக்கு சிறப்பு அறிவியல் பயிற்சிகள் வழங்கினர். இதில், 192 மாணவர்களில் அரசு பள்ளிகளை சேர்ந்த, 87 மாணவர்கள், சென்னை இந்திய தொழிற்நுட்ப நிறுவனத்தில் பயின்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணத்துாரை சேர்ந்த மாணவி, தர்மபுரி அரசு மாதிரி பள்ளியில் படித்து, தற்போது தைவான் நாட்டில் உயர்கல்வி படிக்கிறார். இதுவரை, அரசு பள்ளிகளை மேம்படுத்த தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்த கொடையாளர்கள், 782 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். நாட்டை காக்கக்கூடிய, இளைஞர் சக்தியை கொடுக்கக் கூடிய பெற்றோர்களை கொண்டாடுவோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநாட்டில், பள்ளிக் குழந்தைகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாநாட்டில், மாவட்ட கலெக்டர் சாந்தி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், சதாசிவம், பள்ளிக்கல்வி துறை இயக்குனர் அறிவொளி உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.