/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
/
கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
ADDED : ஏப் 23, 2025 02:37 AM
தர்மபுரி:கணவனை கொன்ற வழக்கில், மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பிச்சானுார் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 35. இவரது மனைவி நதியா, 21. தம்பதிக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நதியாவிற்கும், திண்டல் காலனியை சேர்ந்த முரளி, 25, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால், நதியாவை மாரியப்பன் கண்டித்துள்ளார். கடந்த, 2020 மே, 21ல் பிச்சானுாரை சேர்ந்த மல்லிகா என்பவரின் வீட்டில் மாரியப்பன் சடலமாக கிடந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரணையில், நதியா மற்றும் முரளி ஆகியோர் தலையணையால் மாரியப்பன் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெரித்தும், கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், மாரியப்பனை கொன்ற, நதியா மற்றும் முரளிக்கு ஆயுள் தண்டனை, முரளிக்கு, 12,000 ரூபாய், நதியாவுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிஷா தீர்ப்பளித்தார்.