தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 22, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், சிங்-கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எஸ்.ஐ., கிருஷ்-ணவேணி மற்றும் போலீசார், பெண்கள், சிறு-மியர் மற்றும் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்ப-டுத்தி பேசினர்.

அப்போது, பஸ் ஸ்டாண்ட், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில், ஈவ் டீசிங், பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றங்கள் நடந்தால், அது குறித்து, 24 மணி நேரமும் எங்களை அணுகலாம். அவசர காலங்களில் பெண்கள் தங்களை பாது-காத்துக் கொள்ளும் வழிமுறைகள், சட்டரீதியான உரிமைகள், ஆபத்தான சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எடுத்துரைத்தனர். மேலும், அவசர உதவிகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய பிரத்யேக எண்களான, பெண்கள் உதவி எண் - 181, 112, 1091 மற்றும் பெண் குழந்-தைகள் உதவி எண் - 1098 ஆகியவற்றை அங்கி-ருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us