/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
2,929 பயனாளிகளுக்கு ரூ.31.27 கோடி கடனுதவி
/
2,929 பயனாளிகளுக்கு ரூ.31.27 கோடி கடனுதவி
ADDED : நவ 21, 2025 02:21 AM
தர்மபுரி, தர்மபுரி ஜோதி மஹாலில், கூட்டுறவு துறை சார்பில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடந்தது. தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், 2,929 பயனாளிகளுக்கு, 31.27 கோடி ரூபாய் மதிப்பில், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவி
களை வழங்கி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்பட, 524 பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை, 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடனை உரிய தவணை காலத்தில் திருப்பி செலுத்தும் நேர்வில் விவசாயிகள் செலுத்த வேண்டிய, 7 சதவீத வட்டி தொகையை அரசே ஏற்றுக் கொள்கிறது.
நடப்பாண்டில், 735 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 30,252 விவசாயிகளுக்கு, 316.33 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.

