/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன்
/
சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன்
ADDED : நவ 23, 2024 03:07 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளைகளில், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, 7 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை நடைமுறை மூலதன கடன்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்ய மற்றும் நிறுவனங்களின் கட்டடம் கட்டுதல் போன்றவற்றிற்கு, கலைஞர் கடன் உதவி திட்டத்தில் அசையா சொத்து, அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில், 18 முதல், 65 வயது வரை உள்ளவர்கள் கடன் பெறலாம். புதிய மற்றும் ஏற்கனவே, இயங்கி வரும் குறு உற்-பத்தி நிறுவனங்கள் கடன் பெறலாம். தொழில் முனைவோர்க-ளுக்கு சிபில் மதிப்பீடு, 600 புள்ளிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். நிறுவனங்கள் இரண்டாண்டு லாபத்தில் இயங்கி இருக்க வேண்டும். பிற நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறைந்த வட்-டிக்கு மாற்றி கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் விபரம் பெற, தர்மபுரி தொழில் மைய பொதுமேலாளர் மற்றும் தர்மபுரி பிடமனேரி சாலையில் உள்ள, தாய்கோ வங்கி கிளை மேலாளரை நேரிலோ அல்லது 04342 230892, 04342 266744 என்ற தொலைபேசி எண்கள், 89258 14607 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.