தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'உங்களை தேடி உங்கள் ஊரில்' இரண்டாம் கட்ட திட்ட முகாம்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' இரண்டாம் கட்ட திட்ட முகாம்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' இரண்டாம் கட்ட திட்ட முகாம்


ADDED : ஆக 18, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி தாலு-காவில், 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடப்பது குறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியட்டுள்ள அறிக்கை:

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உட-னுக்குடன் தீர்வு காணும், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தில் நடத்த வேண்டும். அதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்டத்தில், 2ம் கட்ட-மாக ஆக., மாதத்திற்கான முகாம் பாப்பிரெட்டிப்-பட்டி தாலுகாவில் ஆக., 19ம் தேதி காலை, 9:00 மணி முதல், ஆக., 20ம் தேதி காலை, 9:00 மணி வரை நடக்கவுள்ளது.

இதில், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் கள தணிக்கையில், ஈடுபட்டு அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும், 19ம் தேதி பிற்பகல், 3.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் மாவட்டத்தின் முதல்-நிலை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு அரசு திட்டங்-களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்தல் தொடர்பாக பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். முகாம் நாளில் வட்டத்தில் உள்ள, 4 உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் அலுவல-கத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடக்க உள்ளது. இதில், பொதுமக்கள் பட்டா மாறுதல் மனுக்களை அளித்து உடனடி தீர்வு காணலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us