தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : செப் 07, 2025 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரிகளில், மண் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, காரிமங்கலம் தாசில்தார் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் சென்றனர்.

அப்போது, அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிக்கொண்டு, தர்மபுரி--கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை பிடித்தனர். அதிகாரிகளை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பினார்.

இதையடுத்து, 4 யூனிட் களிமண்ணை டிப்பர் லாரியுடன், பறிமுதல் செய்து, காரிமங்கலம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us