/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோட்டில் நொரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்
/
பாலக்கோட்டில் நொரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : டிச 27, 2024 01:00 AM
பாலக்கோடு, டிச. 27-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, இரவு நேரங்களில் சட்ட விரோதமாக நொரம்பு மண் கடத்துவதாக, தர்மபுரி கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, பாலக்கோடு அடுத்த சர்க்கரை ஆலை கூட்ரோடு பகுதியில் கனிமவள உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக நொரம்பு மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரியை பிடித்து அவர் விசாரித்தார். ஓட்டி வந்தவர், பாலக்கோடு புதுார் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பழனி,47, என்பது தெரிந்தது. அவர், பாலக்கோடு சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள ஏரியில் இருந்து, அனுமதியின்றி சட்ட விரோதமாக நொரம்பு மண் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
அதை தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்து பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.