/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கார் மீது லாரி மோதல்; மூதாட்டி பலி; 4 பேர் காயம்
/
கார் மீது லாரி மோதல்; மூதாட்டி பலி; 4 பேர் காயம்
ADDED : மார் 24, 2025 07:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி: சேலம், கொண்டலாம்பட்டி மணியனுாரை சேர்ந்தவர் அந்தோணிராஜ், 40. பேக்கரி தொழில் செய்து வருகிறார். தன் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த செம்பிய மங்கலத்திலுள்ள தன் சகோதரர் ராஜ்குமார் வீட்டிற்கு, தாய் மல்லிகா, 64, மகள்கள் ரேஷ்மா, 11, மெர்சிமெல்ரோஸி, 9, கின்சிசாராள், 4, ஆகியோரை, உறவினர் செல்வா, 40 என்பவருக்கு சொந்தமான ஸ்விப்ட் டிசையர் காரில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அனுப்பினார். காரை செல்வா ஓட்டினார். கார் சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சவாடி கணவாயை கடந்து இரவு, 11:30 மணிக்கு சென்றது.
முன்னால் சென்ற டாரஸ் லாரி திடீரென நின்றதால் செல்வா ஓட்டிச்சென்ற கார், அதன் மீது மோதியது. அப்போது பின்னால் வந்த மற்றொரு டாரஸ் லாரி, கார் மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய மல்லிகா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். குழந்தைகள் ரேஷ்மா, மெர்சிமெல்ரோஸி, கின்சி சாராள், செல்வா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.