ADDED : மே 03, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: நாமக்கல் மாவட்டதை சேர்ந்த லாரி டிரைவர் குப்புசாமி, 44; இவர் மனைவி ஜோதி, 38; இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
குப்புசாமி, நாமக்கல்லில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கடந்த, 10 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 2 நாட்களுக்கு முன், துாத்துக்குடியிலிருந்து முந்திரி கொட்டை லோடு ஏற்றிக்கொண்டு, கர்நாடக மாநிலம் பெல்காம் செல்ல, தர்மபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, பென்னாகரம் பிரிவு சாலை அருகே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.