ADDED : செப் 28, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, கோழி மேக்கனூரில் மா.கம்யூ., கட்சி கிளை மாநாடு நிர்வாகி சின்னா தலைமையில் நடந்தது. இந்திரா முன்னிலை வகித்தார். அம்புரோஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் வஞ்சி, நிர்வாகி தங்கம், வட்ட செயலாளர் தனுசன் பேசினர். சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
பாப்பிரெட்டிப்பட்டி புதிய கிளை செயலாளராக அம்புரோஸ், கோழி மேக்கனூர் கிளை செயலாளராக தங்கம் தேர்வு செய்யப்பட்டனர். வெங்கடசமுத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.