ADDED : ஜன 09, 2025 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரியில், மா.கம்யூ., கட்சியின் மாவட்ட குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் நேற்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் பேசினார். இதில், தர்மபுரி மாவட்டத்தில் விவசாய பின்னணி கொண்ட கிராம பஞ்.,களை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதால், ஊரக வேலைத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயத் தொழிலாளர்-களுக்கு வேலை, அரசு வழங்கும் இலவச வீடு ஆகியவை கிடைக்காது.
வீடுகளுக்கான சொத்துவரி கடுமையாக உயரும். மேலும், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட சேவைகளை வழங்கு-வதில் சிரமம் ஏற்படும். எனவே, கிராம பஞ்.,களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

