ADDED : மார் 13, 2026 07:47 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: சமையல் காஸ் விலை உயர்வால், மத்திய அரசை கண்டித்து, தர்மபுரி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் குமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சமையல் காஸ் விலை உயர்வு, பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாடு, ஈரான் நாட்டின் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படை கூட்டு தாக்குதலை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன், அர்ச்சுனன், முத்து, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
