நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே பெத்-தானுார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிரசன்ன வெங்கட்ர ரமணா சுவாமி கோவில் கும்பாபி-ஷேகம் நேற்று நடந்தது.
கடந்த, 28ம் தேதி புதன்கிழமை கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், முகூர்த்த கால் நடப்பட்டது. நேற்று முன்தினம், தீர்த்த குட ஊர்-வலம் நடந்தது. தொடர்ந்து வாஸ்து பூஜை, யாக-சாலை திக் பாலகர் பூஜை, வேத கர்ஜனை, முதல் கால யோக வேள்வி, ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், தீப ஆராதனை நடந்த நிலையில் நேற்று காலை, பிரசன்ன வெங்கட்ராமன் சுவாமி மற்றும் மகாலட்சுமி பரிவார தெய்வங்களுக்கு மகா கும்-பாபிஷேகம் செய்யப்பட்டது.

