/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிலப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது
/
நிலப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது
ADDED : மே 29, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளியை சேர்ந்த பெண் விவசாயி மாரி, 42. விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 45. இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்துள்ளது. பிரச்னைக்குரிய நிலத்தில் சிவக்குமார், கடந்த, 25ல், உழவு செய்துள்ளார்.
இது குறித்து கேட்ட மாரி, அவரது கணவர் பெருமாள் ஆகியோரை சிவக்குமார் தரப்பினர் தாக்கினர். மாரி புகார் படி, சிவக்குமாரை காரிமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் ராமச்சந்திரன், 45, ராகுல், 29, ராஜ்குமார், 57, ஆகியோரை தேடி வருகின்றனர்.