தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டவர் கைது

200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டவர் கைது

200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டவர் கைது


ADDED : மார் 04, 2026 09:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 09:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:தர்மபுரியில், 200 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்-டவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தர்மபுரி டவுன் நாட்டாண்மைபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 49. இவர், தர்ம

புரியில் பைக் கன்சல்டிங் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த பிப்., 18 அன்று தர்மபுரி டவுனில் உள்ள 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கி கிளையில், வடிவேலுவின் வங்கி கணக்கில், 23,000 ரூபாய் செலுத்த சென்றார். அப்போது, வங்-கியில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்தில் செலுத்தியபோது, 24 எண்ணிக்கையிலான, 200 ரூபாய் நோட்டுகள் மட்டும் சந்தே-கத்திற்கு இடமான வகையில் இருந்தது.

ஆய்வில், 200 ரூபாய் நோட்டுகள், 24ம் கள்ளநோட்டுக்கள் என தெரியவந்தது. வங்கி மேலாளர் மலர்விழி புகார் படி, வடி-வேலை போலீசார் கைது செய்தனர். மேலும், வடிவேலுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தன என்பது குறித்து, தர்ம-புரி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், வடிவேலுவிடம் பைக் வாங்கியவர் போலியான முகவரி மற்றும் போலியான ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பெங்களூருவை சேர்ந்த சக்திவேல், 45, என்பவரை கைது செய்து, அவரிடமி-ருந்து, 27,800 ரூபாய் போலி நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சக்-திவேல், கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்த நிலையில், போலீசார் ‍தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us