sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

லாரியில் 30 டன் ரேஷன் அரிசி; கர்நாடகாவிற்கு கடத்தியவர் கைது

/

லாரியில் 30 டன் ரேஷன் அரிசி; கர்நாடகாவிற்கு கடத்தியவர் கைது

லாரியில் 30 டன் ரேஷன் அரிசி; கர்நாடகாவிற்கு கடத்தியவர் கைது

லாரியில் 30 டன் ரேஷன் அரிசி; கர்நாடகாவிற்கு கடத்தியவர் கைது


ADDED : டிச 05, 2025 11:16 AM

Google News

ADDED : டிச 05, 2025 11:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழக, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புல-னாய்வு துறை, ஈரோடு டி.எஸ்.பி., ராஜபாண்டி தலைமையில், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் சிவ-னேஸ்வரன், எஸ்.ஐ., யாசர் மவுலானா, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் காவலர் சுரேஷ் உள்ளிட்டோர் நேற்று, தர்மபுரியில், கிருஷ்ணகிரி - சேலம் நெடுஞ்சாலையில் ரோந்-துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபு-ரியில் இருந்து பென்னாகரம் செல்லும் பிரதான சாலையில், சந்தேகப்படும் படி ஒரு லாரி நிறுத்-தப்பட்டிருந்தது. அந்த லாரியில், ரேஷன் அரிசி இருப்பதாக கிடைத்த தகவலின் படி, அங்கு சென்ற போலீசார், லாரியில் சோதனை மேற்-கொண்டனர்.

அப்போது லாரியில், தமிழக அரசின் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. மேலும், தலா, 50 கிலோ எடையுள்ள, 600 மூட்டைகளில், 30,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்-பட்டது. இதையடுத்து, லாரி மற்றும் ரேஷன் அரி-சியை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ரேஷன் அரிசியை, பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி, மொத்தமாக கர்நாடகாவிற்கு, பென்னாகரம், அஞ்செட்டி வனப்பகுதி வழியாக கடத்த முயன்ற, தர்மபுரி அருகே சாமிசெட்டிப்-பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார், 43, என்பவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us