/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது
/
ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது
ADDED : டிச 18, 2024 01:45 AM
ரூ.3.92 லட்சம் மதிப்பில் குட்கா கடத்தியவர் கைது
காரிமங்கலம், டிச. 18-
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக, குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக காரிமங்கலம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு காரிமங்கலம் அடுத்துள்ள, கும்பாரஹள்ளி சோதனைச்சாவடியில் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த, மகேந்திரா மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரகசிய அறை அமைத்து, 3.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 385 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. மினி சரக்கு வாகனத்துடன் குட்காவை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுனரான புதுக்கோட்டை மாவட்டம், ரத்தினகோட்டையை சேர்ந்த ரட்சகன், 35, என்பவரை கைது செய்தனர்.